பாடசாலை மைதான அபிவிருத்தியில் கிண்ணியா வலயப் பாடசாலையையும் உள்ளடக்க வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை!

Date:

அரசாங்கத்தின் பாடசாலை மைதான அபிவிருத்தித் திட்டத்தில் கிண்ணியா கல்வி வலய கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தையும் உள்ளடக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தங்களது விளையாட்டுத்துறை அமைச்சு கல்வி அமைச்சுடன் இணைந்து நாடுமுழுவதும் உள்ள வலயக் கல்வி அலுவலகப் பிரிவுகளில் தலா ஒரு பாடசாலை மைதானத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 வலயக் கல்வி அலுவலகப் பிரிவுகளில் 4 வலயக் கல்வி அலுவலகப் பிரிவு பாடசாலை மைதானங்கள் அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து திருகோணமலை மாவட்ட மக்கள் பிரதி என்ற வகையில் எனது நன்றியை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மைதான அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவு பாடசாலை மட்டும் விடுபட்டுள்ளது. இங்கு கிண்ணியா மத்திய கல்லூரி மைதானத்தை அபிவிருத்தி செய்ய கல்வி அதிகாரிகள் சிபார்சு செய்து உரிய அமைச்சுக்கு அனுப்பப் பட்டதாக அறிகின்றேன்.

எனினும், கிண்ணியா மத்திய கல்லூரி மைதானம் மட்டும் இதில் விடுபட்டுள்ளது. எனவே, இந்த அபிவிருத்தித் திட்டத்தில் இப்பாடசாலை மைதானத்தையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான் எம்.பி கேட்டுள்ளார்.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...