மேலும் 08 நாட்டு பயணிகளுக்கு இலங்கை நுழைய தடை!

Date:

நாட்டினுள் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் 8 நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

அங்கொலா, போட்ஸ்வானா, லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, சுவிட்சர்லாந்து, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களினுள் குறித்த நாடுகளுக்குச் சென்ற பயணிகளுக்கும், அந்த நாடுகளின் வழியாக வரும் புலம்பெயர்ந்த பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...