இன்னும் 6 மணித்தியாலங்களுக்குள் அத்தனுகல ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகியவற்றின் கீழ் மட்டங்களில் சிறிய அளவில் வௌ்ள நிலமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.