இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கம் குறியாக இருப்பதன் நோக்கம் இது தான் – எதிர்கட்சித் தலைவரின் பகிரங்க உரை!

Date:

எந்தவொரு திட்டமிடப்பட்ட நடைமுறைகளும் இல்லாமல் இரசாயன உரங்களை தடை செய்வதில் அரசாங்கத்தின் நோக்கம் மக்களை உயிருடன் வைத்திருப்பது அல்லாமல், மக்களைக் கொல்வது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அரசாங்கத்தின் இந்த அவசர மற்றும் தன்னிச்சையான முடிவு தவிர்க்க முடியாமல் நாட்டில் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் மாத்திரமல்லாது பயங்கர பஞ்சம் உருவாகவும் வழிவகுக்கும்.காபனிக் உரங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் திடீரென, பொறுப்பற்ற முறையில் எடுக்கப்பட்ட இரசாயன உரங்களுக்கான இந்த தடை விரைவில் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் வாழ்க்கையிலும் பேரழிவு தரும் அடியாக அரசாங்கத்தால் உணரப்படும்.

இரசாயன உரங்களை தடை செய்வதாகவும்,காபனிக் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அரசாங்கம் கூறுகிறது.காபனிக் உரங்களை வழங்குவதில் பற்றாக்குறையும் உள்ளது, இது அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவாகும். மறுபுறம், இலங்கையில் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் விதைகளுக்கான இரசாயன உரங்களுடன் பழக்கமாகிவிட்டன.நடைமுறையில்லாமல் அறியாமலேயே எடுக்கப்பட்ட முடிவுகளால் இன்று நாட்டின் பேரழிவுக்கே வழிவகுத்துள்ளது.இரசாயன உரங்களை தடை செய்வதாகவும்,காபனிக் உரங்களை இறக்குமதி செய்வதாகவும் அரசாங்கம் கூறுகிறது.இது ஒரு கடுமையான விபத்துக்குச் சமனானது.

இதன் மூலம் உலகின் முன்னணி “குப்பைக் குவியலாக” நம் நாட்டை மாற்ற அரசாங்கத்திடம் சதி உள்ளதா என்ற கடுமையான கேள்வி உள்ளது.குப்பைகளான இந்த கழிவு உரத்தை இறக்குமதி செய்வதால், பல்வேறு பூஞ்சை மற்றும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் நாட்டில் பரவ வாய்ப்புள்ளது.இத்தகைய இறக்குமதிகள விலங்குகள் மற்றும் தாவரச் சட்டத்திற்கும் எதிரானவை.

அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு காபனிக் உரங்கள் போதுமான அளவு வழங்கப்படவில்லை. நடைமுறைத்தன்மையை விலக்கும் அறிவியலற்ற முடிவுகள் பேரழிவுக்கே மீளவும் வழிவகுக்கும்.

இப்போது கூட உரத் தடை காரணமாக மோசமான விளைவுகள் ஏற்பபட்டுள்ளன. இதன் காரணமாக நெல் விவசாயிகள் மிகவும் உதவியற்றவர்களாக மாறியுள்ளனர்.விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரத்தைக் கோரி விவசாய திணைக்களங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்கிறார்கள்.இதற்கு மேலதிகமாக, உருளைக்கிழங்கு விவசாயிகள் மற்றும் பிற தோட்டச் செய்கைகள் விவசாயிகள் போன்றோர்களும் அரசாங்கத்தின் தன்னிச்சையான முடிவுக்கு பலியாகியுள்ளனர்.

சந்தையில் கறுப்பு சந்தை விலையில் விற்கப்படும் இரசாயன உரங்களுக்கான போட்டி காரணமாக கொரோனாவின் புதிய கொத்தனிகள் வெளிவர வாய்ப்புள்ளது. இவற்றை விட முதலில் மக்கள் உயிர் வாழ வேண்டும்.அதற்கு உணவு மிக முக்கியமான காரணியாகும். கொரோனா பேரழிவால் உலகம் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. நோய் பயம் மற்றும் மரண பயம் ஆகியவற்றுடன், இலங்கை அரசாங்கத்தினால் பஞ்சத்துக்கான பயம் என்று மக்களின் மூன்று அச்சங்களுக்கும் அரசாங்கமே அழைப்பு விடுத்துள்ளது.
“ஒவ்வொரு புரட்சியின் மூலமும் பசியும் அதிலிருந்து விடுபடும் சுதந்திரமும் தான்” என்று அரிஸ்டோட்டில் கூறினார். அரசாங்கம் அதன் குறுகிய நோக்கங்களை ஒதுக்கி வைத்து மக்களை உயிருடன் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற பகுத்தறிவற்ற மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை மாற்றியமைக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.

Popular

More like this
Related

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...