இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்வரும் ஜுலை 13 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
மேலும், இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஜுலை 13, 16 மற்றும் 18 ஆகிய திகதிகளில் ஒரு நாள் சர்வதேச போட்டிகளும், ஜுலை 21, 23, 25 ஆகிய திகதிகளில் இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொடரில் பங்குபற்றும் இந்திய அணிக்கு ஷிக்கர் தவான் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.