ஊடகவியலாளர் சமுதித்தவிற்கு எதிராக சந்திமால் தரப்பு வழக்குத் தாக்கல்!

Date:

நீதிமன்ற தீர்ப்பினை அவமதித்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாக ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சந்திமால் ஜயசிங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் மஞ்சு ஸ்ரீ சந்திரசேன தெரிவிக்கும் போது, ‘சந்திமால் ஜயசிங்கவுக்கும் அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் எடுத்த முடிவை விமர்சித்து நீதித்துறையை அவமதித்ததற்காக சமுதித்த சமரவிக்ரம மீது புகார் அளித்துள்ளார்’ என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘நாங்கள் பொலிஸ் நிலையம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் புகார் அளித்தோம். நீதிமன்ற அமர்வுகள் மீண்டும் தொடங்கியதும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம்’, என வழக்கறிஞர் கூறினார்.

இதற்கு மேலதிகமாக, முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி பேணாமல் யூடியூப் நேர்காணலில் தோன்றியதன் மூலம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சமுதித்த சமரவிக்ரம மீது சந்திமால் ஜயசிங்க மேலுமொரு புகார் அளித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் இடம் பெறும் சலகுண நிகழ்சியில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அவர்களிடம் பியுமி ஹன்சமாலியின் விவகாரமும் விவாதிக்கப்பட்டதை தொடர்ந்து பியுமி ஹன்சமாலி குழுவினர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூந்தித்த ஊடகவியாளர் ஹரின்திர ஜயலாலுடன் இடம்பெற்ற நேர்காணலில் தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்...