ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய விஷேட ஊடக வெளியீடு!

Date:

இன்று (07) நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானம் பின்வருமாறு.

ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் ஆதரவு வழங்கும் கட்சிகளுக்குமிடையிலும் முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்ப்பட்டுள்ளதாக சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்பட்ட அடிப்படையற்ற போலியான செய்திகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று தனது கவனத்தை ஈர்த்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இத்தகைய போலியான ஊடக பிரச்சாரத்தை கடுமையாக கண்டனம் செய்ததோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால வெற்றிகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது முழு நம்பிக்கையையும் தெரிவித்து இன்று பிரேரனை ஒன்றை ஏகமானதாக நிறைவேற்றினர்.

மக்களால் நிராகரிக்கப்படும் அரசாங்கத்தையும்,
நிராகரிக்கப்டும் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிக்கும் டீல் அரசியல்வாதிகள் இதற்குப் பின்னால் இருப்பதாகவும், இந்த சதியைத் தோற்கடிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உறுதியளித்து.

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கிம், பாட்டாலி சம்பிக ரணவக்க மனோ கணேசன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்தப் பிரேரனையை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரஞ்சித் மத்தும பன்டார, ரஜித சேனரத்ன,அசோக அபேசிங்க ஆகியோர் ஆமோதித்ததோடு அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இதை ஏற்றுக் கொண்டனர்.

ஊடகப் பிரிவு
ஐக்கிய மக்கள் சக்தி

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...