கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு

Date:

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று (24) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளானமையால், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்று (25) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு வருகைதந்த ஊழியர்கள், இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் தொழிற்சாலை வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.ஊழியர்கள், தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டு வருவதால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இரங்கல்

கலாநிதி தம்மிக்க ஜயசிங்கவின் தந்தையாரின் மறைவுக்கு தேசிய சூரா சபை மற்றும்...