வெலிவேரிய எதிகெஹெல்கல்ல மேற்கு பிரதேசத்தின் மக்கள் தடுப்பூசி கோரி நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
கொவிட் வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் தமது கிராமத்திற்கு இதுவரை ஒரு தடுப்பூசியேனும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் இரண்டாவது அலையில் தனது கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவானதாகவும் சமீபத்தில் தமது கிராமம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.