யேசுதாசன் பிாிசித்தா இவர் மாந்தை மேற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்.
அண்மையில் WCA அனுசரணையில் நடைபெற்ற முதலாவது ஒப்படை போட்டியில் 90க்கும் மேற்பட்ட புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் 75 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அதில் 25 உறுப்பினர்கள் மாத்திரமே தமிழ் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் கலந்து கொண்டவர்கள் பெரும் கட்சிகளில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என்று மொத்தமாக சொன்னால் அரசியலில் ஈடுபடும் பெண்கள் பெரும் அரசியலில் உச்சநிலையில்
உள்ளவர்களுடன் போட்டியிட்டு தான் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.