தென்கிழக்குப் பல்கலையின் வித்தொன்று சரித்திரமாகிறது!

Date:

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பதவி உயர்வு 09.08.2021 முதல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேற்பட்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் உப வேந்தராக நியமிக்கப்படுவது இதுவே முதற் தடவையாகும். இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் சமூகவியல் முதற்தொகுதி மாணவராக கல்வி கற்று, அப்பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, முதல் சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றவர். பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் மிகவும் இள (43) வயதில் உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது நண்பருக்கு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும். அல்ஹம்துலில்லாஹ்!

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...