நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்கள் – சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை!

Date:

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மீண்டும் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளதாக சுகாதாரப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாதத்தின், கடந்த சில தினங்களில் மாத்திரம் 184 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 888 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 80,031 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டின் பல மாவட்டங்களில் பதிவாகக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...