நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (04) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து அறிவுறுத்தினார்.

மேலும், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு அது தொடர்பில் அறிவித்த பிரதமர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை அந்தந்த மாவட்ட செயலாளர்களின் ஊடாக உடனடியாக செயற்படுத்துமாறு தெரிவித்தார்.

அதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு பிரதமர் இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவுக்கு அறிவுறுத்தினார்.

நாட்டின் பல பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பிரதேசங்கள் மழை நீரில் மூழ்கல், வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயங்கள் அவற்றில் பிரதானமாகும்.

மேல் மாகாணம், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு மக்களுக்கு தெரியப்படுத்துமாறு பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...