நாடாளுமன்ற கட்டட தொகுதியின் அனைத்து அலுவலகங்களும் எதிர்வரும் 7ம் திகதிவரை மூடப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை 7ம் திகதிவரை நீடிப்பதால் அனைத்து அலுவலக ஊழியர்களும் கடமைக்கு சமுகமளிக்கத் தேவையில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மாத்திரம் பாதுகாப்பு கடமையில் இருப்பர்.
நாடாளுமன்றம் 8ம் திகதி கூடவுள்ள போதும் 7ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழு கூட்டத்தில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குசானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.