பள்ளிவாயல் ஊழியர்கள் 5000 ரூபா அரச நிவாரணம் பெறலாம்!

Date:

மே மாதம் 31ம் திகதி வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுநிருபத்தின் படி பள்ளிவாயல் ஊழியர்களும் 5000 ரூபா நிவாரணம் பெற தகுதிபெற்றுள்ளனர். அதன் தமிழ் மொழிபெயர்ப்பும் இங்கு தரப்பட்டுள்ளது.

 

இன்று (01.06. 2021)புத்தசாசன மற்றும் சமய கலாசார விவகாரங்கள் அமைச்சரான பிரதமரின் பணிப்புரையின்படி அமைச்சின் செயலாளர் சமூர்தி ஆணையாளர் நாயகத்துக்கு எழுதிய கடிதம் இது. இதன் பிரகாரம் பள்ளிவாயல்களில் கடைமையாற்றும் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார் இந்த நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஏனைய ஊழியர்களும் மே மாதம் 31ம் திகதிய

சுற்று நிருபத்தின்படி தகுதி பெறுகின்றனர். இவை குடும்பங்களுக்கே வழங்கப்படுவதால் குடும்பம் வசிக்கும் பகுதியில் பெற்றுக் கொள்ளலாம். திருமணம் முடிக்காதவர்கள் தமது பெற்றோருடன் இல்லாது தனியாக வாழ்ந்தால் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இந்நிவாரணத்துக்கு தகுதியாகலாம். பிள்ளைகள் திருமணம் முடித்து விட்ட மனைவியை இழந்து தனியாக வாழ்வோரும் இந்நிவாரணத்துக்கு தகுதியானோரே. எனினும் அவ்வப்பகுதி அதிகாரிகளின் வழிகாட்டலைப் பேணி நடந்து கொள்ளவும். எமது திணைக்களத்துக்கு இவ்விடயத்தில் எந்த அதிகாரமும் இல்லை.

 

மே மாதம் 31ம் திகதி ற்றுநிரூபத்தின் பிரகாரம் ஏற்கனவே இந்த 5000 ரூபா நிவாரணம் பெற்றுக்கொண்டவர்கள் மீண்டும் ஒரு முறை இந்த 5000 ரூபா நிவாரணத்தைப் பெறமுடியாது.

 

எனினும் பிரச்சினைகள் இருந்தால் அவற்றை ஆராய்ந்து வழிகாட்டவும் முடியுமான வகையில் உதவி செய்யவும் எமது திணைக்களம் தயாராகவுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...