பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு நாளை முதல்!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை முதல் இடம் பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (11) பிரதமர் ஆலோசனை வழங்கினார். இதன்போதே இந்த கொடுப்பனவு தொடர்பாக பிரதமர் அறிவித்தார்.

 

கப்பல் விபத்துக்குள்ளானதால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. இழப்பீட்டை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு பிரதமர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...