உலகின் பிரபல உதைப்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வீடியோ வைரலானதை தொடர்ந்து கொக்கா கோலாவின் பங்குகள் 4 பில்லியன் அளவுக்கு அதாவது 1.6% சரிவை சந்தித்துள்ளது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, பத்ரிகையாளர் சந்திப்பில் கொக்கா கோலா போத்தல்களை தள்ளி வைத்து விட்டு தண்ணீர் குடிக்குமாறு கூறிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து கொக்கா கோலா நிறுவனத்துக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த உலகின் நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரராக திகழும் கிறிஸ்டியனோ ரொனால்டோ (வயது 36), நடைபெற்று வரும் UEFA EURO 2020
தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
குரூப் F பிரிவில் ஹங்கேரி அணிக்கெதிரான ஆட்டத்துக்கு முன்னதாக வழக்கமான செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொக்கா கோலா இரண்டையும்
அப்புறப்படுத்தி விட்டு பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை மேலே உயர்த்திக் காட்டினார்.
இதன் காரணமாக தற்போது கோகோ கோலாவின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளது. கொக்கா கோலாவின் பங்குகள் 4 பில்லியன் அளவுக்கு அதாவது 1.6% சரிவை சந்தித்துள்ளது. ( இலங்கை மதிப்பில் சுமார் 80909 கோடி ரூபாய்) இதனையடுத்து 242 பில்லியனாக இருந்த கொக்கா கோலாவின் மொத்த பங்கு மதிப்பு, 238 பில்லியனாக சரிந்துள்ளது.
காணொளி