பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர்!

Date:

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து செல்லும் போது, திடீரென அவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு பிரான்சில் உள்ள ஒரு இடத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென மேக்ரான் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதை பாதுகாப்பு வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அவர்கள் சுதாரித்துக் கொண்டு அந்த நபரை கீழே தள்ளினர். மேக்ரானை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு அவமரியாதை என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.

மேக்ரான் தென்-கிழக்கு பிரான்சின் டிரோம் பகுதியில் கொரோனாவிற்கு பின் வாழ்க்கை எப்படி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து மாணவர்கள், உணவகங்கள் நடத்துபவர்களை சந்தித்து கேட்டு அறிந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது.

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...