மாதிவெல பகுதியிலும் டெல்டா வைரஸ் திரிபு!

Date:

கொழும்பு மாதிவெல – பிரகதிபுர பகுதியில், டெல்டா கொவிட் திரிபு தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டதையடுத்து, அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், தெமட்டகொட ஆராமய இடம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கமைய, அதிக வீரியம் கொண்ட டெல்டா கொவிட் திரிபுடன் கூடிய 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இலங்கையில் டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனையடுத்து, அப் பிரதேசத்தை தனிமைப்படுத்தி, குறித்த தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் உள்ளிட்ட நபர்களுக்கு பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சுகாதார அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய, நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வீரியம் மிக்க டெல்டா திரிபு பரவியுள்ளதா எனக் கண்டறிய விசேட பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...