வீடொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளம் தம்பதி

Date:

நேற்று (06) பிற்பகல் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 வயது ஆண் மற்றும் ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அவர்கள் இருவரும் வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...