கடந்த 14 நாட்களுள் இந்தியா,வியட்நாம்,தென் ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்றிருந்த எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கை வருவதற்கு அனுமதி இல்லையென அண்மையில் சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.
எனினும் மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த அதேவேளை கொவிட் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக் கொண்டுள்ளவர்கள் தடுப்பூசிகளின் இரண்டு மாத்திரைகள்) இலங்கை வர அனுமதிக்கப்படுவர் என்றும் இவர்கள் கட்டாய சுயத்தனிமைப்படுத்தலை கடைப்பிடிப்பது அவசியமில்லை எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய கடந்த 14 நாட்களுக்குள் மேற்படி நாடுகளுக்கு சென்றிருந்த இலங்கையர்கள் அல்லது இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்கள் மற்றும் இடைமாறல் பயணிகள் மாத்திரம் இலங்கை திரும்பும்போது கட்டாய சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட தேவையில்லை.
இதேவேளை வெளிநாடுகளிலிருந்து வருகைத்தருவோர் கட்டாயமாக 14 நாட்கள் சுயத்தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.