13 நாட்களில் 500 கொரோனா மரணங்கள் | எச்சரிக்கை விடுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Date:

நாட்டில் கொவிட் தொற்று தொடர்பிலான தரவுகளை வெளியிடும் நிறுவனங்களின் தகவல்களின் பிரகாரம், கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா உயிரிழப்புக்களின் உண்மை தன்மை தெளிவில்லாது காணப்படுகின்றது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபத் தலைவர் டொக்டர் சந்திம எப்பிட்டிகடுவ தெரிவிக்கின்றார்.

இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தரவுகளுக்கு அமைய,நாட்டில் முதல் 500 கொரோனா உயிரிழப்புக்கள், 343 நாட்களில் பதிவானதாக அவர் கூறுகின்றார்.

மேலும், அடுத்த 500 கொரோனா உயிரிழப்புக்கள், 72 நாட்களில் பதிவானதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.எனினும், மூன்றாவது 500 கொரோனா உயிரிழப்புக்கள் 13 நாட்களிலேயே பதிவானதாக அவர் கூறுகின்றார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,910 ஆக அதிகரித்துள்ள நிலையில், அடுத்த 500 கொரோனா உயிரிழப்புக்கள் இதைவிடவும் குறைந்த நாட்களிலேயே பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கின்றது.

Popular

More like this
Related

நெருக்கடியில் நெதன்யாகு: ஈரான் போரால் எடுபடாத அரசியல் கணக்கு; முன்கூட்டிய தேர்தலைத் தவிர்க்க முயற்சி

ஈரான் உடனான போர் மூலம் தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள...

அமெரிக்க – ஈரான் போர்: வளைகுடா நாடுகளுக்கு புதிய பாதுகாப்புச் சிந்தனை தேவை- தமிமுன் அன்சாரி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சேர்ந்து ஈரான் மீது...

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...