எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

Date:

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை தொடர்பாக 1,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 150 முறைப்பாடுகள் மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகச் சில சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள பாதுகாப்பு கமராக்களை (CCTV) ஆய்வு செய்து சந்தேகநபர்களை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அறியாமையினாலோ அல்லது தவறுதலாகவோ பிறருடைய QR குறியீட்டைப் பயன்படுத்தியிருந்தாலும், அவை தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் என அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 6 மில்லியனுக்கும் அதிகமானோர் QR குறியீட்டிற்காகப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய பொலிஸாருடன் இணைந்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...