இன்று (01) இணைய காணொளி மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், 2021 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து கலந்டுரையடவுள்ளது.
இந்த ஆண்டின் 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடரை, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்றாலும், இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரை, எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், உலகக் கிண்ண 20 க்கு 20 கிரிக்கட் தொடரை நடத்துவதற்கு, இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கால அவகாசம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.