600,000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோடாபய ராஜபக்க்ஷ கோரிக்கை ஒன்றை முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த மாதம் 9 ஆம் திகதி ஜப்பானிய தூதருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கைக்கான ஜப்பானிய தூதர் இதை உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், 600,000 அஸ்ட்ராசெனெகா மருந்துகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்க ஜப்பான் பரிசீலித்து வருகிறது என்ற செய்தியை உறுதிப்படுத்த ஜப்பான் மறுத்துவிட்டது.
இது குறித்து தகவல் வெளியிட்ட “டெய்லி மிரர்” ஊடகம் ஜப்பானிய தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளது, இலங்கைக்கு 600,000 அஸ்ட்ராசெனெகா மருந்துகள் வழங்குவதற்கான கோரிக்கைக்கு ஜப்பானில் இருந்து சாதகமான பதிலைப் பெற்றதாக உறுதிப்படுத்த ஜப்பானிய தூதரகம் மறுத்துவிட்டது.