பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த போதும் நேற்றைய தினத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இதுவரையான பயணத் தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் அதிகமானவர்கள் உயிரிழந்த சந்தர்ப்பம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்களில் 5 பேர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்கள் எனவும் நான்கு பேர் அதிக வேகம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சாதாரணமாக பயணத் தடை விதிக்கப்படாத நாட்களில் கூட நாளொன்றுக்கு 8 அல்லது 9 பேரே விபத்துகளில் உயிரிழப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.