நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட சில தேவைகளுக்காக நாளை முதல் நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்தார்.