அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இதுவரை 30 பேர் கைச்சாத்து

Date:

ஐக்கிய மக்கள் சக்தியினால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகபாராளுமன்றத்தில் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க எடுத்த தீர்மானத்திற்கு அமைய, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் குறித்த பதவியில் அவர் இருப்பதற்கு உரித்துடையவர் அல்ல என, 10 காரணங்களை முன்வைத்து, ஐக்கிய மக்கள் சக்தியினால், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான கையொப்பம் பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

மேலும், சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ள குறித்த ஆவணத்தில் இதுவரை 30 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...