இஸ்ரேலின் ஆட்சி மாற்றம் பலஸ்தீன் விடயத்தில் முன்னேற்றம் தருமா?

Date:

இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து பெஞ்சமின் தலைமையிலான அரசாங்கத்தை பதவி இழக்கச் செய்துள்ளனர்.

தொடர்ந்து 12 வருடங்களாக பதவி வகித்த பெஞ்சமினின் அரசுக்கு பாரிய அளவிலான மோசடி குற்றச் சாட்டுக்கள் இருந்து வந்த நிலையில், பெரும்பான்மை இல்லாமல் கூட்டுக் கட்சிகளின் ஆதரவுடன் காபந்து ஆட்சி நடத்தி வந்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கவிழ்த்துள்ளனர்.

பெஞ்சமினின் கட்சி சில இடங்களில் வெற்றியை பெற்றிருந்தாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 61 இவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைப்பதில் நெதன்யாகுவுக்குச் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் நெதன்யாகுவுக்கு எதிராக எதிர்க்கட்சிக கூட்டனி அமைத்தன.

இஸ்ரேலில் உள்ள சிறு அரபு கட்சி எட்டு கட்சிகள் முனைப்புடன் ஏனைய யாமினா அரசியல் கட்சி தலைமையில் கட்சிகள் கூட்டாக இணைந்து நெதன்யாகுவின் ஆட்சிக்குத் முற்றுப்புள்ளி வைத்தது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்தக் கூட்டணிக் கட்சிகள் சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொள்ள உடன்பட்டுள்ளனர். வலதுசாரி கட்சியான யாமினா கட்சியின் தலைவர் பென்னெட் பிரதமராகப் பதவி ஏற்க இவர்களது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து முதல் முறையாக நெதன்யாகு ஊடகங்களுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சி கூட்டத்தில் பேசும்போது,

“நாம் இந்த நாட்டின் வரலாற்றின் மிக மோசமான பெரிய அளவிலான தேர்தல் மோசடியை சந்தித்துள்ளோம். மக்கள் இதைக் கண்டு அமைதியாக இருக்க கூடாது. மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் போராட வேண்டும். இவ்வாறான தேர்தல் மோசடியை மக்கள் அனுமதிக்கக் கூடாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறு இருந்தாலூம் தற்போது பதவி ஏற்பவர் முன்னால் பாதுகாப்பு அமைச்சராகவும். மத கலாச்சார அமைச்சராவும் செயல் பட்டவர் என்ற ரீதியில், காஸா பிரச்சினைகளில்.எவ்வாறு செயல் படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.

இவரது பதவி இழப்புக்கு அண்மையில் பலஸ்தீனுடனான.யுத்தத்தில் தோல்வியை ஏற்று நிபந்தனையற்ற.ஒரு தலை பட்சமான யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டதும். யுத்தத்தைத் தொடங்கி இஸ்ரேல் மீதான பாரிய நெருக்கடியை தோற்று வித்தமையும் இவரது ஆட்ற்சி கவிழ்பிற்கும் ஆட்சியை தொடர்வதற்கான நெருக்கடிக்கும் ஒரு முக்கிய காரணமாகும்.

பேருவளை ஹில்மி (LNN)

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....