உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பல் | மக்களே அவதானம்!

Date:

பயங்கரவாத விசாரணை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி, தொலைப்பேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி அச்சுறுத்தல் விடுத்து பணம் பறிக்கும் மோசடியில் குறித்து காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது  தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையதாகவும், அதற்கான சாட்சிகள் உள்ளதாகவும், குறித்த நபர்கள் அழைப்பை ஏற்படுத்தி தெரிவிப்பதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும், வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு வருவதற்கான வாகனத்திற்கான பயண செலவை வைப்பிலிட வேண்டும் என குறித்த மோசடியாளர்கள் கோருகின்றனர். இல்லாவிடின், குறித்த நபர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத்திற்கு வருகைத்தரவேண்டும் என்றும் மோசடியாளர்கள் தெரிவிப்பதாக போலீஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பொதுமக்கள் இதற்கு ஏமாற வேண்டாம் என்றும் போலீஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...