கடவுச்சீட்டு வழங்க குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட வேலைத்திட்டம்

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு நாட்டு மக்களுக்கு கடவுச்சீட்டு வழங்க குடிவரவு, குடியகல்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் (கடவுச்சீட்டுஅலுவலகம்) பிரதான காரியாலயம், மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய பிராந்தியங்களில் செயல்படவுள்ளது.

மேலும், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே சேவைகள் வழங்கப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, கட்டாய தேவை உள்ளவர்கள், தமது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள காரியாலயத்தை, கீழ்வரும் இலக்கங்கள் ஊடாக தொடர்புகொண்டு, நேரத்தை முன்பதிவு செய்துகொண்டதன் பின்னர் இலகுவில் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , பத்தரமுல்லையிலுள்ள தலைமை காரியாலயத்துடன் 070 -710 10 60 அல்லது 070 – 710 10 70 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு காலை 9 மணிமுதல் பிற்பகல் ஒரு மணி வரையான கால எல்லைக்குள் நேரமொன்றை முன்பதிவுசெய்து, கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கமுடியும்.

மாத்தறை பிராந்திய அலுவலகம் –  041 – 54 12 212 / 041 51 04 444

கண்டி பிராந்திய அலுவலகம் – 081 – 56 24 509 / 081 – 56 24 470

வவுனியா பிராந்திய அலுவலகம் – 025 – 56 76 344 / 025 – 56 76 345

குருணாகல் பிராந்திய அலுவலகம் – 037 – 55 50 562 / 037 – 55 50 563

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...