சத்திய பிரமாணமளிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்களை நியமித்தல் மற்றும் கண்காணித்தலை முறைமைப்படுத்துவதற்காகவும், அதுதொடர்பாக தற்போது காணப்படும் ஏற்பாடுகளின் தெளிவின்மையை நீக்குவதற்காகவும் பொருத்தமான வகையில் குடியியல் வழக்கு கோவையின் XVI ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குடியியல் வழக்கு கோவையின் XVI ஆம் அத்தியாயத்தின் 118, 119 மற்றும் 120 போன்ற உறுப்புரைகளைத் திருத்தம் செய்வதற்கும், அதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.