ஜனாதிபதி கோத்தபய தலதா மாளிகைக்கு விஜயம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று (26) பிற்பகல், கண்டியில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்து, மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

பின்னர், மல்வத்தை மஹா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து, நலன் விசாரித்தார். மஹாநாயக்க தேரர் பிரித் பாராயணம் செய்து, ஜனாதிபதியை ஆசிர்வதித்தார்.

மல்வத்தைப் பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் அவர்களையும் சந்தித்த ஜனாதிபதி தேரரின் நலன் விசாரித்தார். அனுநாயக்க தேரர் அவர்களுக்காக இலங்கைக் கடற்படையின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் சங்கவாசக் கட்டிடத்தையும், ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்த தேரரையும் சந்தித்த ஜனாதிபதி, தேரர் அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து, மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...