பேருவளை “மருதானை செரிடி” அமைப்பினால் உள்ளக கிராமங்களின் புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை!

Date:

அண்மையில் பேருவளை Maradana Charity “மருதானை செரிடி” அமைப்பு பேருவளையில் உள்ள பல கிராமங்களின் புள்ளிவிபர தரவுகள் சேகரிக்கும் பணியினை மேற்கொண்டிருந்தது.
மருதானை, அரப் வீதி, ஹெட்டியாகந்தை, ஹேனவத்தை, கபடாகொட, வத்ஹிமிராஜபுர, கொரகாதுவ, கொடவத்தமலை, மாளிகாஹேனை, பண்டாரவத்தை, ஷேக் அப்துல் முஹீஸ் மாவத்தை போன்ற கிராமங்களின் தரவுகளே சேகரிக்கப்பட்டது.

கிராமங்களிலுள்ள சனத்தொகை, முதியோர் எண்ணிக்கை, சிறுவர்களின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை, வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை, விதவைகள் மற்றும் அனாதைகளின் எண்ணிக்கை என பல்வேறு முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இப்பணியில் ஊடகவியலாளர் ரூமி ஹாரிஸ் தலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள், உயர்தர மாணவர்கள் என பல்வேறுபட்ட மாணவர் குழுக்கள் கலந்து கொண்டனர்.

இந்த தகவல் திரட்டல் மூலம் Maradana Charity அமைப்பின் எதிர்கால செயல்திட்டங்களை இலகுவான முறையில் மேற்கொள்ளுவதற்கு உதவியாக அமையுமென Maradana Charity அமைப்பின் பொதுச்செயலாளர் ரூமி ஹாரிஸ் தெரிவித்தார்.

இந்தப் புள்ளி விபரங்கள் அடங்கிய Mobile App விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்த Mobile App இனை Maradana Charity உறுப்பினரும், இளம் தொழில்நுட்பவியலாளருமான சஹ்மி அஹமட் உருவாக்கிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...