பொசன் போயா தினத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி விசேட நடைமுறை!

Date:

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலுக்கமைய பொசன் போயா தினத்தை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி மாவட்ட செயலக பக்திப்பாடல் குழுவினர் பிரத்தியேக வாகனம் மூலம் பக்தி கீதங்களை நகர்சார் பிரதேங்களில் பவனிவந்து பாடும் வகையிலான ஒழுங்குகள் இன்று(24) மாலை மாவட்ட செயலக வளாகத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

தற்போது நிலவும் கொவிட் அசாதாரண சூழ்நிலையாலும் பயணக்கட்டுப்பாடுகளாலும் பக்தர்கள் பொசன் போயா தின அனுஷ்டாங்களை மேற்கொள்ளமுடியாததை முன்னிட்டே இப்பிரத்தியேக ஏற்பாடு பகதர்களின் நலன்கருதி அரசாங்க அதிபரால் தலைமையிலான மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது.

 

இப்பக்திபாடல் குழுவினர் முக்கியமான வீதிகளில் பாடல்களை பாடுவதுடன் நாட்டுக்கு ஆசிவேண்டியும் வலம்வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதன் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் சனத் குருகுலசூரிய உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...