எரிபொருள் விலை அதிகரிக்க வேண்டும் என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த திருத்தத்தை மேற்கொள்ளும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.