ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். | இம்ரான் எம்.பி

Date:

சில கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களது கோரிக்கை நியாயமானது என்பதால் இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாம் எமது நல்லாட்சி அரசு காலத்தில் ஆசிரியர்கள் உட்பட சகல அரச உத்தியோகத்தர்களினதும் அடிப்படைச் சம்பளத்தை 100 சதவீதம் அதிகரித்தோம். முன்னைய அரசு அதிகரித்து வைத்திருந்த எரிபொருள், சமையலறை எரிவாயு என்பவற்றின் விலைகளைக் கனிசமான அளவு குறைத்திருந்தோம். ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டன. சகல மருந்துப் பொருட்களினது விலைகளும் குறைக்கப்பட்டன.

இதனால் அரச உத்தியோகத்தர்கள் கடனின்றி சம்பளத்துள் சமாளித்து வாழும் நிலை உருவாக்கப்பட்டது. ஏனையோரும் தமது வருமானத்துக் கேற்ப வாழும் நிலை உருவாக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் மற்றுமொரு சம்பள அதிகரிப்புக்கான அமைச்சரவைப் பத்திரமும் எமது அரசு காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்ததும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தை இரத்து செய்தது. சகல பொருட்களினதும் விலைகளும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மக்கள் மீது பெருஞ் சுமைகள் திணிக்கப்பட்டுள்ளது. தமது சம்பளத்துள் வாழ முடியாத சூழ்நிலை அரச உத்தியோகத்தர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் தமது அந்தஸ்தை உறுதிப் படுத்தும் வகையிலும், நாட்டின் ஜனநாயகக் கல்வி முறையை உறுதிப் படுத்தும் வகையிலும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களது இந்த ஜனநாயகப் போராட்டத்துக்கும் அரசினால் இடையூறு செய்யப்பட்டது. இது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே, ஆசிரியர்களது இந்த நியாயமான கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் திருப்திப் படும் வகையில் தீர்வினை முன்வைக்க வேண்டும்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...