இந்தியாவின் வெற்றி இலக்கு 263|போட்டி தொடர்கிறது!

Date:

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 263 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

 

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

 

தசுன் சானக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், சரித் அசலங்க 38 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் தீபக் சஹார், குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இந்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச திடலில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...