இரவு வேளையில் நடமாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கும் விதித்துள்ள தண்டனை!

Date:

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது, சுகாதார நடைமுறைகளை மீறி, இரவு வேளையில் நடமாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கு, அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாட ஒரு வருட கால தடை விதிக்க ஶ்இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோருக்கே இந்த போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒவ்வொரு வீரருக்கும் தலா 10 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

மேலும், உள்நாட்டு போட்டிகளில் விளையாட, குறித்த மூன்று வீரர்களுக்கும் 6 மாத கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...