இலங்கை உட்பட மேலும் சில நாடுகளுக்கு தடை விதித்த ஐக்கிய அரபு இராச்சியம்!

Date:

கொரோனா அச்சம் காரணமாக இலங்கை உட்பட 13 நாடுகளுக்கான பயணத் தடையினை ஐக்கிய அரபு அமீரகம் வியாழனன்று அறிவித்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், பயணப் பருவத்தின் தொடக்கத்துடன், குடிமக்கள் கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் இணங்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் வெளியுறவு மற்றும் தேசிய அவசர அமைச்சங்கள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த 14 நாட்களில் இந்தியா, நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்தவர்களுக்கு நுழைவுத் தடை ஜூன் 23 முதல் குறைவடையும் என்று துபாய் ஜூன் 19 அன்று கூறியிருந்தது.

அதற்கிணங்க கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இந்தியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்களுக்கும், தென்னாபிரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட எவருக்கும், கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையை பரிசோதித்த நைஜீரியாவிற்கும் இந்த நுழைவு அனுமதிக்கப்படும்.

இந் நிலையிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மேற்கண்ட தடை உத்தரவினை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...