கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் நேற்று முன்தினம் (06) வரை 934 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
இதற்கமைய, 883 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளதுடன் 22 இந்து உடல்களும், 14 கிறிஸ்தவ உடல்களும் 13 பௌத்த உடல்களும், 02 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 934 உடல்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களில் ஒருவர் இந்தியர் எனவும் மற்றவர் நைஜீரியாவை சேர்ந்தர் என அவர் மேலும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Please consider planting a coconut or arecanut or cloves, orJak, or Goraka or any other useful tree in the MAJMA graveyard in consultationwith a Agricultural Extension Officer in the area and Tapioca will also grow in that land.