பயங்கரவாத தடை சட்டத்தின் சில சரத்துக்களை சீரமைப்பதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு சபையினால் இந்த குழு நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.இந்தக் குழு, குறித்த சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய சரத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.இதன்படி குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேநேரம் பல்வேறு அமைப்புகளும் நாடுகளும் இதுதொடர்பான வலியுறுத்தல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன.