அமெரிக்காவினால் விடுக்கப்பட்ட இலங்கைக்கான பயண எச்சரிக்கையில் மாற்றம்!

Date:

2021 மே மாதம் 24ம் திகதி இலங்கைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த 4ம் நிலை பயண எச்சரிக்கை ஜூலை மாதம் 06ம் திகதி முதல் 3ம் நிலை பயண எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 3ம் நிலை பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

 

கொவிட்-19 நிலைமை காரணமாக இலங்கை தொடர்பில் இவ்வாறான பயண ஆலோசனை வழங்கப்படுகின்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாதம் அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது.

 

அத்துடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று (07) விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இலங்கை தொடர்பில் நிலை 03 முதல் நிலை 04 வரையிலான பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை கருதி வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

 

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு அறிக்கையும் பதிவாகவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துக் கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...