நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற 26,000 பைஸர் தடுப்பூசி டோஸ்கள், அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஏற்றப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
55 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரை அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு நாளை முதல் செலுத்தப்படவுள்ளது.
மேலும், தடுப்பூசி ஏற்றும் திகதி, இடம் மற்றும் நேரம் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.