இலத்திரனியல் வாகனப் பாவனையை அதிகரிக்க அமைச்சரவை

Date:

 

இலத்திரனியல் வாகனப் பாவனையை அதிகரிக்க அமைச்சரவை

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய 2020 ஆம் ஆண்டிறுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 08 மில்லியன்களைத் தாண்டியுள்ளது.

அவற்றில் குறிப்பிடத்தக்களவு வாகனங்கள் 10 வருடங்களுக்கும் அதிகமாக பழைய வாகனங்கள் ஆவதுடன், அவ்வாறான பழைய வாகனங்கள் சரியான வகையில் பராமரிக்கப்படாமையால் நச்சு வாயுக்கள் வெளியிடப்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையின் வாயு மாசடைதலில் 60 வீதமானவை மோட்டார் வாகனங்களால் இடம்பெறுவதாக மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீள்பிறப்பாக்க எரிசக்தித் திட்டங்களைத் துரிதமாக மேற்கொள்வது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாக அமைவதால், மோட்டார் வாகனப் போக்குவரத்திற்கு மீள்பிறப்பாக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல் தொடர்பாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலத்திரனியல் வாகனப் பாவனையை ஊக்குவிப்பதற்காக மூலோபாயத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...