நடைபெறவுள்ள டோக்யோ ஒலிம்பிக் போட்டி 2020 க்கு குறிபார்த்து சுடும் போட்டியில் தகுதி பெற்ற கடற்படை வீராங்கனை தெஹானி எகோதவெலவுக்கு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவினால் பெட்டி ஒப்பிசர் தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு பெறுமதி வாய்ந்த நிதியுதவியும் கடற்படை தளபதியினால் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வு விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு கொவிட் – 19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழகாட்டுதலுக்கமைய பயோ பாதுகாப்பு முன்னுரிமை முறையில் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.