கொழும்பில் டெல்டா திரிபுடன் 11 பேர் அடையாளம்!

Date:

அண்மையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக, கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

 

அவர்களில் ஐந்து பேர் கெத்தாராம விளையாட்டரங்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்கள்.இரண்டு பேர் தெமடகொடையிலும் இரண்டு பேர் வட கொழும்பிலும் உள்ளவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

 

அதேநேரம் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா திரிபுடனான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இதன்படி நாட்டில் டெல்டா திரிபுடன் கூடிய 36 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...