செஸ் வரி திருத்தத்துடன் அடங்கிய கட்டளையை பாராளுமன்றத்தில் முன்வைக்க இணக்கம்!

Date:

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பண்டங்கள் ஏற்றுமதி சம்பந்தமான செஸ் வரி திருத்தம் அடங்கிய கட்டளையை பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் பண்டங்கள் ஏற்றுமதி சம்பந்தமான செஸ் வரி திருத்தம் அடங்கிய கட்டளையை பாராளுமன்றத்துக்கு முன்வைப்பதற்கு வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் நேற்று (01) இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான இந்த கட்டளை வர்த்தக அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2021 ஜனவரி 21 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

 

1972 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் 14(1) பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் வர்த்தக அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட 2210/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஏற்றுமதியின் போதான செஸ் வரி திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

 

கௌரவ வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களின் தலைமையில் வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (01) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

 

பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன திசாநாயக்க, நலின் பிரனாந்து, மர்ஜான் பளீல் ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

இதற்கமைய எதிர்வரும் தினமொன்றில் இந்த கட்டளையை பாராளுமன்ற அனுமதிக்காக முவைக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...