தேசிய பாதுகாப்பென்பது வெறுமனே இராணுவ ரீதியான பாதுகாப்பை மாத்திரமல்ல | ரோஹினி கவிரத்ன

Date:

இணையதளத்தின் ஊடாக 15 வயதுச் சிறுமி ஒருவர் விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைகள் நிறுத்தப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படக் கூடாது. அதுமாத்திரமன்றி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நால்வரும் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி தேசிய பாதுகாப்பென்பது வெறுமனே இராணுவ ரீதியான பாதுகாப்பை மாத்திரமல்ல. மாறாக இந்நாட்டில் வாழும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுமக்களினதும் பாதுகாப்பை உள்ளடக்கியது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (12) திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...