தொடர்ந்தும் இணைய வழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

Date:

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் நேற்று (12) முதல் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக அவர குறிப்பிட்டுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்த சந்தர்ப்பத்தில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர்,

தனிமைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...